Posted On Feb 27,2012,By Muthukumar
காதலர்களோ,
தம்பதியரோ முதலில் அவர்களின் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பாஷை முத்தம்.
முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை
கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும்
மாறுபடுகிறது.
முத்தத்தில் வித்தியாசம்
ஒரு
கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு
கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. கணவன் மனைவிக்கு
கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும். ஆனால்,
காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு,
காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை
அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற
எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும்
முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.
இப்போதெல்லாம்
முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே
நடத்தப்படுவதால் பல வகையிலான முத்தங்கள் தோன்றிவிட்டன. உதாரணமாக உதட்டோடு
உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்". இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள்
இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொண்டார்கள்.
முத்தத்தில் வேறுபாடு
பாலுறவின்போது
ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக்
கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட
அந்த ஆய்வு. அந்த ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண்
இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது. பிரெஞ்சு
கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை மோகத் தீ பலமாக வீசி, இருவரது உடல்களும்
பின்னிப் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான்
துணையிடம் விரும்புகிறார்களாம்.
முத்தத்திற்கு மரியாதை
ஒவ்வொரு
நாட்டினர் இடையேயும் முத்தம் வேறு வேறு வழிகளில் கையாளப்படுகிறது.
பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும்
சுகப்பரவசம் எல்லாம் ஒன்றாகவே இருக்கிறது. பிற நாட்டினரைக் காட்டிலும்
பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல்
முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.
அவர்களுக்குள்
காதல் தோல்வி ஏற்படும்போதும் கூட, முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம்
கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது
உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள்.
அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது
காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவள் அல்லது அவன் கொடுத்த உள்ளாடையை
முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.
No comments:
Post a Comment