horse

horse

Sunday, May 31, 2015

இஞ்சி சாறுடன் சிறிது, தேன் கலந்து குடித்து வந்தால் . . .

 


வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. இந்த தொந்தி யை
குறைத்து ஆரோக்கியம் பேணுபவர்களுக்கு என்றும் இதய நோய் அவர்களை நெருங்காது. இந்த தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தியும் ஒரு முக்கிய காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கி றது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி சாற்றுட ன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
செய்முறை
500 கிராம் இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு பிழிந்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சிறு தீயிட்டு எரிக்கவும். சுண்டியதும் இறக்கிவிடவும். சாறு எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவுக்கு தேன் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து சிறு தீயாக ஒரு நிமிடம் எரித்து இறக்கி பத்திரத்தப்படுத்தவும்.
சாப்பிடும் முறை
காலை சாப்பாட்டுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பும், மாலை 6 மணிக்கும் ஒரு மேசைக்கரண்டி அளவு 40 நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால் தொந்தி குறையும். அத்துடன் உணவுக்கட்டுப்பாடும் வேண்டும்
குறிப்பு
இந்த இஞ்சி சாற்றுடன் தேன் கலந்து குடிக்க‍த் தொடங்கும்முன் உங்களது உடலில் சர்க்க‍ரையின் அளவை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள‍வது அவசியம்.

No comments:

Post a Comment