horse

horse

Friday, January 30, 2015

தொப்பையைக் குறைக்க‍ எளிய யோகா இருக்க‍ கவலை எதுக்கு?



ரொம்ப எளிதானது, ஆனா
பண்றது கஷ்டம். முடிஞ்சா பண்ணி்க்கோங்க.

* காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க
* கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.
* கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல் கொஞ்சம் மேலே தூக்குங்கள்.
* கையை தரையில் ரொம்ப அழுத்தம் கொடுக்காதீர்கள்.
Yoga
* கால்கள் தரையில் இருந்து இரண்டு சாண் அளவு உயர்ந்தி ருந்தால் போதும்
* எவ்வளவு நேரம் அப்படியே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் அவ்வாறே இருங்கள்
* அவ்வளவுதான். கொஞ்சம் நிதானப்படுத்தி விட்டு மறுபடி தொடருங்கள்.
எச்ச‍ரிக்கைக் குறிப்பு-
* வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்
* கற்பிணி பெண்கள், சிசேரியன் செய்துகொண்ட பெண்கள், வயற்றில் அறுவைசிகிச்சை செய்துள்ளவர்கள் இதை செய்யக் கூடாது.

Wednesday, January 7, 2015

தொப்பை குறைய 4 வழிகள்


“எந்த  உடையும் அணிய முடியாது, எளிதாக ஓடியாட முடியாது என தொப்பையால் வரும் சங்கடங்கள் அதிகம். சர்க்கரை, ரத்த அழுத்தம், இதயநோய் என எந்த உடல் பிரச்னைக்கும் மருத்துவர் கைகாட்டுவது தொப்பையைத்தான். தினமும் 10 நிமிடங்கள் ஒதுக்கினால், தொப்பையை எளிதாக விரட்டிவிடலாம்.
1. க்ரஞ்ச் வித் ஹீல் புஷ்  (Crunch with heel push)
A) தரையில் நன்றாக படுத்துக் கொள்ளுங்கள்.  இரு கைகளையும் தலைக்கு கீழ் வைத்துக்கொண்டு, முட்டியைத்  தூக்கி, குதிகால் மட்டும் தரையில் படுமாறு படுத்திருக்கவும்.
B) கால் முட்டியையும், பாதத்தையும் மடக்காமல் கைகளையும் தலையில் இருந்து எடுக்காமல் மேற்பாதி உடம்பை வயிற்றில் அழுத்தம் கொடுத்து தூக்கவும். இந்த நிலையில் சில வினாடிகள் இருக்கவும், பிறகு மீண்டும் முதல் நிலைக்குத் திரும்பவும்.
2. விரல்களால்தொடும் பயிற்சி (Fingers to toes)
A) தரையில் நேராக படுத்துக்கொள்ளவும். பிறகு, கால்களையும், கைகளையும் நேர்கோட்டில் உயர்த்தவும்.
B) வயிற்றுப்பகுதியில் அழுத்தம் கொடுத்து தலையை மட்டும் சற்றே உயர்த்தவும். கைகளை மடக்காமல், கை விரல்களால் பாதத்தைத் தொட முயற்சிக்கவும்.
3. லையிங் லெக் ரைஸ் (Lying leg raise)
A) கைகளை நீட்டியவாறு படுத்துக்கொள்ளவும்.
B) இரண்டு கால்களை மட்டும் ஒருசேர உயர்த்தவும். இதே நிலையில் 15 வினாடிகள் இருக்கவும். பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும்.
4. ரிவர்ஸ் க்ரஞ்ச் (Reverse crunch)
A) இரண்டு கைகளையும் பக்கவாட்டில் வைத்தபடி, நேராகப் படுக்கவும். பிறகு தொடைப் பகுதியை தூக்கி, முட்டியை மடக்கிய நிலையில் இருக்குமாறு கால்களை உயர்த்தவும்.
B) கைகள் தரையில் பதித்தபடி இருக்க, தொடைப் பகுதியானது நெஞ்சுப் பகுதியின் மேல் இருக்குமாறு நன்றாக மடக்கவும். பத்து வினாடிகளுக்கு பிறகு மீண்டும் முதல் நிலைக்குத் திரும்பவும்.
  இந்தப் பயிற்சிகள் ஒவ்வொன்றையும் 10-12 முறை இடைவெளி விடாமல் செய்ய வேண்டும். ஒரு பயிற்சியில் இருந்து மற்றொரு பயிற்சிக்கு மாற, 30 வினாடிகள் இடைவெளி எடுத்துக்கொள்ளவும்.
  முதல் நிலையில் மூச்சை உள் இழுக்கவும் இரண்டாம் நிலையில் மூச்சை மெதுவாக வெளியிடவும். வயிற்றுப்பகுதியில் அழுத்தம் ஏற்படுவதை உணருமாறு நன்றாகப் பயிற்சி செய்யவும்.
  இந்தப் பயிற்சிகளுடன் டயட் கடைப்பிடித்தால் எளிதில் தொப்பை குறையும்.
  சாப்பிட்டவுடன் செய்யக் கூடாது. சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்துதான், இந்தப் பயிற்சிகளை செய்யவேண்டும்.
  ட்ராக்சூட், டி ஷர்ட், ஷூ அணிந்துகொண்டுதான் பயிற்சி செய்ய வேண்டும். படுத்தபடி செய்யும் பயிற்சிகளுக்கு, தரைவிரிப்பு அவசியம்.

  பயிற்சியுடன் நம்பிக்கையோடு தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால், தொப்பை குறைவதை உணர முடியும்.