horse

horse

Tuesday, June 9, 2015

அன்னாசிப் பழம்


தென் அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாசிப் பழம் உலகம் முழுக்கப் பரவ கப்பல் மாலுமிகள் ஒரு மிகப் பெரிய காரணம். அவர்கள் எங்கு பயணத்தை மேற்கொண்டாலும் வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படக்கூடிய ஸ்கார்வி நோயைத் தவிர்ப்பதற்காக, அன்னாசிப்பழத்தை எடுத்துச்செல்வது வழக்கம். இதில் இருந்தே இந்தப் பழத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.
annachi
உடலுக்குத் தேவையான சில குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் இதில் நிறைவாகவே உள்ளன. திசுக்கள் வீக்கம் அடைவதைத் தடுக்கிறது. புற்றுநோயை எதிர்க்கும் ரசாயனப் பொருட்கள் உள்ளன. அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது எலும்பு தொடர்பான பிரச்னைகள், செரிமானக் குறைவு, குடலில் புழு தொந்தரவு போன்றவை வராமல் தடுக்கும்.
untitled
மாங்கனீஸ் தாதுப்பொருள் இருப்பதால், எலும்பு உறுதித்தன்மைக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். வைட்டமின் சி நிறைவாக உள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். குமட்டல், வாந்தியைத் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு மார்னிங் சிக்னஸ் நேரத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கிறது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிறு செரிமானம் மற்றும் மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். செரிமானத் திறன் அதிகரிக்கும்.
குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற தொந்தரவு ஏற்படலாம். சிலருக்கு அன்னாசிப்பழம் அலர்ஜியை ஏற்படுத்தும் என்பதால், அலர்ஜி பிரச்னை உள்ளவர்கள்  தவிர்ப்பது நல்லது.
பொட்டாசியம் அளவு குறைவு என்பதால் சிறுநீரக செயலிழப்பு பிரச்னை உள்ளவர்கள் இதை ஓரளவுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment