horse

horse

Wednesday, July 18, 2012

கால்களை மிருதுவாக்கும் மீன் கடி வைத்தியம்!

Posted On July 18,2012,By Muthukumar
அதிக தூரம் நடப்பதால் சிலருக்கு பாதங்கள், விரல்களில் வலி ஏற்படும். பாதங்களை தடவி கொடுத்தாலோ, விரல் களில் சொடக்கு போட்டாலோ, ஒரு வித இதமான சுகம் ஏற்படும். ஆனாலும், சிறிது நேரத்திலேயே, மீண்டும் வலி ஆரம்பித்து விடும்.
இப்படிப்பட்ட பிரச்னை களால் பாதிக்கப்பட்டவர்களுக் காகவும், பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள விரும்பு வோருக்காகவும், பிரத்யேகமாக ஒரு சிகிச்சை முறை, உலகின் பல நாடுகளில் தற்போது செயல் படுத்தப்பட்டு வருகிறது.
"மீன் ஸ்பா' என, அழைக் கப்படும் இந்த சிகிச்சை முறை யில், ஒரு சிறிய தொட்டிக்குள் தண்ணீரை நிரப்பி, அதற்குள், "கர்ரா ரூபா' என்ற வகை சிறிய மீன்களை உலவ விடுகின்றனர். பின், பாதங்களை அழகாக்க விரும்புவோரின் கால்களை, அந்த தொட்டிக்குள் விடுகின்றனர்.
குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு பின், கால்களை தொட்டியில் இருந்து வெளியில் எடுத்து விடலாம். மீன் கடிக்குப் பின், பாதங்கள் மிக அழகாக தோன்றுவதுடன், ஏற்கனவே அவற்றில் இருந்த வலி எல்லாம் மறைந்து, புத்துணர்வு ஏற்படு வதாகவும் கூறுகின்றனர்.
ஜப்பான், குரேஷியா, பெல் ஜியம், சீனா உள்ளிட்ட நாடு களைத் தொடர்ந்து, இந்தியா விலும் இந்த மீன் கடி வைத்தியம் பிரபலமாகி வருகிறது.

No comments:

Post a Comment