horse

horse

Friday, July 27, 2012

டீன் ஏஜில் அழகை பாதுகாப்பது எப்படி?

Posted On July 27,2012,By Muthukumar
டீன் ஏஜ் பெண்கள், உணவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. பழம், சாலட், ஏடு நீக்கிய பால் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும். சாக்லேட், கேக், பொரித்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது. டூ சருமம் பளபளப்பாக இருக்க, கிரீம் பயன்படுத்த தேவையில்லை. குளிர்ந்த நீரும், சோப்பும் போதும். டூ முகப்பருவை ஒரு போதும் உடைத்து விடக் கூடாது. அப்படி உடைத்தால், அது கரும்புள்ளியாக மாறி, அழகை கெடுக்கும். டூ கஸ்தூரி மஞ்சளையும், சந்தனத்தையும் அரைத்து, முகத்தில் பூசினால் முகப்பரு நீங்கும். டூ வறண்ட சருமத்தை கொண்ட பெண்கள், வாரத்திற்கு ஒரு முறை ஆலிவ் எண்ணெயை முகத்தில் தேய்த்து, இளம் சுடு நீரில் சோப்பு உபயோகித்து கழுவலாம். டீன் ஏஜ் பெண்கள், பேபி சோப் அல்லது கிளிசரின் சோப் பயன்படுத்துவது நல்லது. டூ டீன்-ஏஜ் பெண்கள், பற்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சீரற்ற பற்களின் வரிசையை சரி செய்யவும், உயர்ந்து நிற்கும் பற்களை சமன்படுத்தவும் பல் மருத்துவரை அணுகவும்.
டூ அளவுக்கு அதிகமாக மேக் - அப் போட்டுக் கொள்ளக் கூடாது. அழகாக இருக்க வேண்டுமானால், உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ அவசியம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment